News November 19, 2025
இருமல் மருந்துகள் எளிதாக கிடைக்க இதுதான் காரணம்

இருமல் மருந்துகள் தற்போது குறைந்த அபாயம் கொண்ட ‘Schedule K’ பட்டியலில் உள்ளன. பேண்டேஜ், கிருமி நாசினிகள், பாரசிட்டமால் உள்ளிட்டவையும் இதே பட்டியலில் உள்ளன. இதனால், இம்மருந்துகளை வாங்க (அ) விற்க பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை. பார்மஸி லைசன்ஸ் இல்லாதவர்களும் இந்த மருந்துகளை விற்பனை செய்ய முடியும். ஆதலால், <<18326796>>இருமல் மருந்தை<<>> அட்டவணை ‘கே’-வில் இருந்து நீக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
Similar News
News April 7, 2026
இந்து பழக்கத்தை மாற்ற திமுக முயற்சி: பட்னாவிஸ்

சனாதன விரோத, இந்து விரோத அரசாக திமுக உள்ளது என MH CM தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார். மதுரையில் NDA வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அவர், நாட்டில் காலம் காலமாக நடைமுறையில் உள்ள இந்துக்களின் பழக்கத்தை திமுக மதிக்க மறுக்கிறது என சாடினார். இந்து சமூகத்தை வெறுக்கும் அரசாக உள்ள திமுகவிற்கு, இத்தேர்தலில் மக்கள் பதில் கொடுப்பார்கள் என சூளுரைத்தார்.
News April 7, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,040 குறைந்தது

தங்கம் விலை நேற்று மாலை நேர வர்த்தகத்தில் சவரனுக்கு ₹1,440 உயர்ந்த நிலையில், இன்று அந்த விலையில் தலைகீழாக சரிந்து காலை நேர வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹130 குறைந்து ₹13,860-க்கும், சவரன் ₹1,040 குறைந்து ₹1,10,880-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடிவருவதால் நகை வாங்க நினைக்கும் நடுத்தர மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News April 7, 2026
தாமரை மலரட்டும் அவிநாசி வளரட்டும்: எல்.முருகன்

அதிமுக வசம் இருந்த அவிநாசி தொகுதியில் இம்முறையில் பாஜக சார்பில் எல்.முருகன் களமிறங்கியுள்ளார். அந்த தொகுதியின் செல்வாக்குமிக்க தலைவராக இருந்த முன்னாள் சபாநாயகர் தனபாலிடம் வாழ்த்து பெற்றுவிட்டு, எல்.முருகன் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். குப்பேபாளையம் மற்றும் காட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை செய்த அவர், அவிநாசிக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு கேட்டார்.


