News April 17, 2024
இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி

திருவள்ளூர் நகராட்சியில் மக்களவைத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு நேற்று வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் கலந்துகொண்ட இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Similar News
News November 18, 2025
தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவி தேர்வு

தாம்பரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டிக்கான வீரர்கள் தேர்வு போட்டியில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த குயிக் ஸ்பேரோ வில்வித்தை பயிற்சி மையத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி தவ்ஷிகா தஸ்னீம்(14) பெண் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து இவர் டிசம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற உள்ள 21 வயதிற்கு உட்பட்ட இந்திய ஜூனியர் வில்வித்தை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
News November 18, 2025
திருவள்ளூருக்கு பெருமை சேர்த்த பாலபுரம் ஊராட்சி

மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 6வது தேசிய நீர் மேலாண்மை விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலாபுரம் ஊராட்சிக்கு தேசிய அளவில் நீர் மேலாண்மையில் 3வது இடம் கிடைத்தது. இதற்கான விருதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப்பிடம் வழங்கினார்.
News November 18, 2025
திருவள்ளூர்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <


