News April 29, 2024
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

சின்னசேலம் அடுத்த கனியாமூர் பஸ் நிறுத்தம் அருகே இன்று(ஏப்ரல்.29) சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற காரின் டயர் வெடித்ததில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு நபர்கள் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் இருவரும் மாமந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
Similar News
News August 23, 2025
க.குறிச்சி: கள்ளச்சாராயம்காசியவர் கைது

கல்வராயன் மலை அத்திப்பாடி கிராம பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வெள்ளம் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட SP க்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அவரது தலைமையில் கரியலூர் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் அத்திப்பாடி சுற்றுவட்டார பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலை என்பவர் பதுக்கி வைத்திருந்த 2000 கிலோ வெள்ளம் பறிமுதல் செய்து கொட்டி அளித்ததுடன் அவரை கைது செய்தனர்.
News August 23, 2025
கள்ளக்குறிச்சி: 10ஆம் வகுப்பு போதும்! அட்டகாசமான அரசு வேலை!

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை கீழ் இயங்கும் அச்சு மையங்களில் காலியாக உள்ள Junior Electrician, Assistant Offset Machine Technician, Junior Mechanic உள்ளிட்ட 56 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். <
News August 23, 2025
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் இருபாலருக்கும் நடத்தப்படுகின்றன. மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. பங்கேற்க விரும்புவோர் www.sports.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.