News January 25, 2025
இருக்கை வசதி ஏற்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கடைகள், தொழில் நிறுவனங்களில் நின்று கொண்டே பணிபுரியும் பணியாளர்கள் பணியிடையே அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி அமர்வதற்கு ஏதுவாக நிறுவன வளாகத்தில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் முத்து நேற்று தெரிவித்துள்ளார். மேலும் இருக்கை வசதி செய்து தராத 12 நிறுவனம் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News August 30, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.30 ) நாமக்கல் – வேதபிறவி (9498167158 ), ராசிபுரம் – சுகவனம் ( 9498174815), திருச்செங்கோடு – சாஸ்தா இந்துசேகரன் ( 8300019722), வேலூர் – பழனி ( 9498110873) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 30, 2025
கடன் தீர்க்கும் அணியாபுரம் காலபைரவர்!

நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை, கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 30, 2025
தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத சனிக்கிழமையையொட்டி இன்று காலை 10:30 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்குப் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.