News December 19, 2025
இருக்கிறோம் எனக்காட்டவே எதிர்ப்பு: செந்தில் பாலாஜி

பழைய கட்சி, புதிய கட்சி என யாராக இருந்தாலும் சரி திமுகவை தான் போட்டி என்று கூறுவதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். <<18602926>>விஜய்யின் விமர்சனங்களுக்கு<<>> பதிலளித்த அவர், மக்கள் மனதில் நிலைத்திருக்கும் திமுகவோடு போட்டி என்று சொன்னால் தான், தங்கள் இருப்பை மக்களிடம் வெளிப்படுத்த முடியும் என்பதற்காக பேசி வருவதாக குறிப்பிட்டார். தேர்தல் முடிந்த பிறகு எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News December 30, 2025
கரூர் துயரம்.. தமிழக அரசு பரபரப்பு தகவல்

கரூர் விவகாரம் தொடர்பாக CBI தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. கூட்ட நெரிசல் Walkie-talkie மூலம் தவெக தரப்புக்கு கூறப்பட்டதாக கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலுக்கு சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளே காரணமென தவெக வைத்த குற்றச்சாட்டையும் அரசு தரப்பு மறுத்துள்ளதாம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 30, 2025
ஹாஸ்பிடலில் நல்லகண்ணு; பரபரப்பு அறிக்கை

ஹாஸ்பிடலில் உள்ள நல்லகண்ணுவை சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம் என CPI வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு, கடந்த 28-ம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி GH-ல் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தீவிர சிகிச்சையில் இருப்பதால், யாரும் வந்து பார்க்கக்கூடாது என டாக்டர் அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
காதலியை கரம்பிடிக்கிறார் பிரியங்கா காந்தி மகன்!

பிரியங்கா காந்தி-ராபர்ட் வதேராவின் மகனான ரெய்ஹானுக்கு தனது 7 வருட காதலியான அவிவா பெய்க்குடன் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 வயதான ரெய்ஹான் தொழில்ரீதியான புகைப்பட கலைஞர் ஆவார். ஏற்கெனவே ‘தி இந்தியா ஸ்டோரி’ என்ற பெயரில் தனிநபர் கண்காட்சிகளை நடத்தி அவர் பாராட்டுகளை பெற்றுள்ளார். அதேபோன்று அவரது காதலி அவிவாவும் புகைப்படக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.


