News February 27, 2025
இராம்நாடு மக்களே..! அடுத்த மூன்று நாட்கள் கவனம்

தமிழகத்தில் இன்று (பிப்.27) முதல் வரும் ஞாயிறு வரை மழை நீடிக்கும் என தனியார் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் கன முதல் மிக கனமழையும், குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி,தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் மழை தீவிரமடையும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆகவே ராமநாதபுரம் மக்கள் 3 நாட்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். *ஷேர்
Similar News
News April 8, 2026
இராம்நாடு: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் சிறுமியை அசோக்குமார் (37) என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், அசோக் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.

இராம்நாடு: இன்று இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு..!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி துணைமின் நிலையத்தில் அவசரப் பணி காரணமாக இன்று (ஏப்.8) காலை 11 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். குறிப்பாக மின்னோட்ட பகுதிகளான சிட்கோ, எமனேஸ்வரம், மஞசள்பட்டினம், வலையனேந்தல், வைகை நகர், புதுநகர், காந்தி நகர், பெரும்பச்சேரி, மணிநகர், சேதுபதி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.