News October 10, 2025

இராம்நாடு: டிகிரி இருந்தால் ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 368 துறை கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணிக்கு 368 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 -33 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக ஏதாவதொரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து அக்.14 வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT.

Similar News

News October 10, 2025

இராமநாதபுரம்: கிராம ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்கள்

image

இராமநாதபுரம் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. இணையதள முகவரியில் இன்று முதல் (அக்.10) விண்ணப்பிக்கலாம். (விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.11.2025) *ஷேர் பண்ணுங்க

News October 10, 2025

பரமக்குடியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

image

பரமக்குடி வட்டம், பாம்பூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் (42) இராமநாதபுரம் – மதுரை நெடுஞ்சாலையில் ஆடு மேய்த்து கொண்டு இருந்த போது மின்னல் தாக்கி (அக்.08) உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக அரசு மேய்ச்சல்காரர்களுக்கு சிறப்பு காப்பீட்டு திட்டங்களையும் அதிகபட்ச இழப்பீட்டு தொகையையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

News October 10, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நீதிமன்ற காவல்

image

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை மன்னார் நீதிமன்றத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக் மீனவர்களை வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அடுத்து 30 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!