News August 21, 2025
இராம்நாடு அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

இராம்நாடு மக்கள் கவனத்திற்கு; நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவார். *ஷேர் பண்ணுங்க
Similar News
News February 17, 2026
இராமநாதபுரம்: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5000

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (2 தவணைகள்)
2. 2வது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, இங்கு <
News February 17, 2026
ராமநாதபுரம்: மின்சாரம் தாக்கி பலி

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே காத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனி தனக்கு சொந்தமான வயல்வெளிகளில் மிளகாய், பருத்தி பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் அட்டூழியம் செய்வதாக கூறி தோட்டத்திற்கு கொடுக்கப்பட்ட மின்வேலியை கடக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 17, 2026
இராமநாதபுரம்: கனமழைக்கு எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிவரும் சூழலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் 21ஆம் தேதி கனமழை பெய்ய கூடும். அடுத்த நாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. *ஷேர் பண்ணுங்க


