News April 17, 2025

இராமேஸ்வரம் கோவிலில் தரிசன கட்டணம் ரத்து

image

இராமேஸ்வரம், திருச்செந்தூர், திருவரங்கம் உள்ளிட்ட பத்து திருக்கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு தரிசன‌ கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும், அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.51.50 கோடி மதிப்பீட்டில் சமயபுரம், இராமேஸ்வரம், திருவரங்கம், வேளச்சேரி உள்ளிட்ட 4 கோவில்களில் அர்ச்சகர் (ம) பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டி தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

Similar News

News August 25, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (24-08-2025) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசரநிலை அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை எதிர்கொண்டால், பொதுமக்கள் உடனடியாக காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க*

News August 24, 2025

BREAKING இராம்நாடு மக்களுக்கு குட் நியூஸ்!

image

ராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ONGCக்கு SEIAA அனுமதி வழங்கிய நிலையில், அதனை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அத்துடன், “ONGC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறுமாறு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அறிவுறுத்தியதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். TN-ல் இனி எப்போதும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

News August 24, 2025

BREAKING இராமநாதபுரம் சாலை விபத்தில் இருவர் பலி

image

இராமநாதபுரம் மாவட்டம் களக்குடி அருகே இன்று (ஆகஸ்ட்.24) புதுக்கோட்டையில் இருந்து வந்த கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு பேரில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!