News January 17, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News January 21, 2026

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.10 கோடி பரிசு

image

தேசிய அளவில் நீர் மேலாண்மையில் முதலிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மத்திய அரசு ரூ.10கோடி வழங்கியது. இதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோனிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.இ ந்த பரிசு தொகையானது மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தபடும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

News January 21, 2026

இராமநாதபுரம் ஜன.23 மிஸ் பண்ணிடாதீங்க..

image

இராமநாதபுரம் மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் (ஜன, 23) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. 18 முதல் 40 வயது வரை உள்ள, தகுதி வாய்ந்த நபர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

இராமநாதபுரத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

image

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா ஜன.15 அன்று கொண்டாடபட உள்ளது. இதையொட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தை தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் வந்து செல்வவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!