News January 15, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 3, 2026
ராம்நாடு: இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்.!

சின்னஅரியப்புவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மனைவி சரோஜா (55). நேற்று காலை அவர் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முற்பட்டபோது, அந்த இடம் பக்கத்து கிராமமான பழங்குளம் கிராமத்திற்குச் சொந்தமானது எனக் கூறி அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
News April 2, 2026
ராம்நாடு : மாதம் ₹1,000 செலுத்தினால்.. ரூ.5.54 லட்சம்

பெண் குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது . குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இத்திட்டத்தின் கீழ் கணக்கை திறக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 21 ஆண்டுகள் முடிவில் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ. 5,54,206 கிடைக்கும். தொடர்புக்கு வங்கிகள் (அ ) தபால் நிலையத்தை அணுகவும்
News April 2, 2026
ராம்நாடு: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இங்கு<


