News April 17, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News April 18, 2025
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு மேலே உள்ள படத்தில் உள்ள தொலைபேசி எண்களை அழைக்கலாம்.
News April 18, 2025
“இராம்நாட்” விமானம் பற்றி தெரியுமா?

ராஜ ராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதியின் ஆட்சியின்போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அவர் ராமநாதபுரம் சீமை இளைஞர்களை ராணுவத்தில் சேருமாறு அறிவுறுத்தியதோடு பல லட்சம் ரூபாய் மதிப்பில் அரசுக்கு “இராம்நாட்” என்ற பெயரில் ஒரு விமானத்தை கொடையாக கொடுத்துள்ளார்.மேலும் இராஜ ராஜேஸ்வர சேதுபதி,போர்க்கால நிதியுதவிக்காக பல லட்சங்களை வழங்கியது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
News April 18, 2025
ராமர் பாலம் அருகே சுற்றுலா படகு சேவை – இலங்கை அரசு திட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள ராமர் பாலம் பகுதியில் சுற்றுலா படகு சவாரியை தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கு பயணிகள் சேவை தொடங்கப்படும் என்று இலங்கை அதிபர் அநுர குமார் இன்று (ஏப்.18) அறிவித்துள்ளார்.மேலும் சுற்றுலா பயன்பாட்டிற்கு மணல் திட்டுகளை தனியார் பயன்படுத்தி கொள்ளவும் இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது பற்றி உங்க கருத்து.Comment,Share.