News September 5, 2025

இராமநாதபுரம்: மாநில கொள்கை பரப்பு செயலாளராக நியமனம்

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஒன்றியம் ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்த அஜீஸ்பாய் தமிழர் அதிகாரம் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தமிழர் அதிகாரம் கட்சியின் தலைவர் அழகர் சாமி அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட மாநில கொள்கை பரப்பு செயலாளருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News September 5, 2025

ராம்நாடு: நம்ம ஊரில் அரசு வேலை.. நேரில் செல்லுங்கள்!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108, 102 ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர், ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான நேர்காணல் R.S.மங்களம் (சனி), பார்திபனூர் (ஞாயிறு) ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற உள்ளது. வேலை தேடுவோர் சான்றிதழ்களுடன் நேரில் செல்லலாம். சம்பளம் ரூ.21,000. மேலும் தகவலுக்கு 8925941097 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News September 4, 2025

இராமநாதபுரம்: ரயில் சேவையில் மாற்றம்

image

ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சேது அதிவிரைவு ரயில் (வ.எண்கள்: 22662/ 22661) & போட் மெயில் (வ.எண்கள்: 16752/16751) விரைவு ரயில் 10.9.2025 முதல் 11.9.2025 வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயங்கும். எழும்பூர் ரயில் நிலையம் செல்லாது என தெற்கு ரயில்வே சென்னை போக்குவரத்து தலைமையகம் அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

News September 4, 2025

உச்சிப்புளி அருகே மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

image

உச்சிப்புளி என்மனங்கொண்டான் பகுதியில் உள்ள காமராஜர் நகர் டிரான்ஸ்பார்மரில் நேற்று (செப். 3) உச்சிப்புளியை சேர்ந்த லைன்மேன் தர்மன் என்பவர் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் உள்ள பழுதை சரி செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி லைன்மேன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!