News December 25, 2025
இராமநாதபுரம் மன்னரால் வாங்கப்பட்ட விமானம்

ராஜ ராஜேஸ்வர சேதுபதியின் ஆட்சியின் போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அவர் ராமநாதபுரம் சீமை இளைஞர்களை ராணுவத்தில் சேருமாறு அறிவுறுத்தியதோடு ரூ.பல லட்சம் மதிப்பில் அரசுக்கு “இராம்நாட்” என்ற பெயரில் ஒரு விமானத்தை கொடையாக கொடுத்துள்ளார். மேலும் இராஜ ராஜேஸ்வர சேதுபதி,போர்க்கால நிதியுதவிக்காக பல லட்சங்களை வழங்கியது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. SHARE
Similar News
News December 28, 2025
ராமநாதபுரம்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 28, 2025
மண்டபம்: மீணவர்களுக்காக கடிதம் எழுதிய ஸ்டாலின்

மண்டபத்தை சேர்ந்த 3 மீணவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசு கைது செய்து படகை பறிமுதல் செய்தது. இதையடுத்து மீனவர்கள், படகுகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் செய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் மீனவர்கள் கைது மீண்டும் நிகழாமல் இருக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
News December 28, 2025
ராமேஸ்வரம்: நாளை முதல் 2 நாட்களை தடை விதித்த எஸ்பி

ராமேஸ்வரத்தில் டிச.30 அன்று நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்விற்காக துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் வருகை தரவுள்ளார். இவரது வருகையை ஒட்டி ராமேஸ்வரம் வட்டாரத்தில் டிச.29,30 அன்று ட்ரோன் பறக்க தடை விதித்து ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்வில்கவர்னர் ரவி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் (கல்வி), முருகன் (நாடாளுமன்ற விவகாரம்), சென்னை ஐஐடி இயக்குநர் பங்கேற்க உள்ளனர்.


