News October 29, 2025
இராமநாதபுரம்: போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்

ராமநாதபுரம், பசும்பொன் கிராமத்தில் 29, 30 ஆகிய தேதிகளில் உ.முத்துராமலிங்கத் தேவர் 63வது குருபூஜை விழா,118 ஆவது ஜெயந்தி விழாவையொட்டி போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆர் எஸ் மங்கலம், சருகனி, சிவகங்கை வழியாக மதுரைக்கு செல்ல வேண்டும். *ஷேர் பண்ணுங்க
Similar News
News October 30, 2025
தேவர் ஜெயந்தி விழா.. 500 சிசிடிவி கேமிராக்கள்

பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28 முதல் 30 வரை நடைபெறும் 118வது தேவர் ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழாவை முன்னிட்டு, பசும்பொன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
News October 29, 2025
இராமநாதபுரம்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக். 29) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News October 29, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 கிராம ஊராட்சிகளில் நவ. 1 காலை 11 மணியளவில் உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊரகப் பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மக்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


