News October 4, 2025
இராமநாதபுரம் – புதிதாக 5 சிசிடிவி கேமரா பொருத்தம்

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் SAFE RAMAND திட்டத்தின் கீழ் துறைமுகம் அப்துல் கலாம் நகர் பகுதியில் 3 சிசிடிவி கேமராவும், இளஞ்செம்பூர் எம்.சாலை ரோடு பகுதியில் 2 சிசிடிவி கேமரா என மாவட்ட முழுவதும் மொத்தம் 3139 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட கிராமங்களில் சிசிடிவி கேமரா பொருத்த உதவியாக இருந்த கிராம நிர்வாகிகளுக்கு எஸ்பி சந்தீஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2026
இராம்நாடு: கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா..?

இராம்நாடு மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். SHARE IT
News April 9, 2026
BREAKING: ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
News April 9, 2026
இராமேஸ்வரம்:சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். பிப்.19ல் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்றம், மார்ச் 26ல் 5 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. விமானம் மூலம் சென்னை வந்த மீனவர்கள் அங்கிருந்து ராமேஸ்வரம் அழைத்து வரப்பட்டனர்.


