News March 24, 2025
இராமநாதபுரம் பகல் நேர ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

இன்று (மார்ச்.24) பகல் 10 மணி முதல் மாலை 4 மணி வரை பகல் நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். பகல் நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
Similar News
News April 12, 2025
ராமநாதபுரத்தில் 187 சமையல் உதவியாளர் பணி

ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்
News April 12, 2025
டூவீலரில் சேலை சிக்கிபெண் பலி

ராமநாதபுரம், R.S மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 53. இவர் கணவருடன் நேற்று காலை ஊரிலிருந்து டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.செங்குடி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முனியம்மாளின் சேலை டூவீலரின் சக்கரத்தில் சிக்கியதால் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தெரிந்த பெண்களுக்கு SHARE செய்து பைக்கில் செல்லும்போது விழிப்புணர்வுடன் இருங்க சொல்லுங்க.
News April 12, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல். 11) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.