News March 24, 2025
இராமநாதபுரம்: நல்ல பாம்பு வடிவிலான முருங்கைக்காய்

ஆப்பனூர் கிராமத்தில் விவசாயி முனியாண்டி விவசாய பண்ணை தோட்டத்தில் பயிரிடப்பட்ட முருங்கை மரத்தில் காய்த்துள்ள முருங்கைக்காய் ஒன்று வினோதமான முறையில் நல்ல பாம்பு வடிவிலான முருங்கைக்காய் வைத்து வளர்ந்தது இதனை ஆர்வமுடன் கண்டு ரசித்த விவசாயி குடும்பத்தினர் அந்த முருங்கைக்காயை கையால் பறித்து காண்பித்து புகைப்படம் எடுத்து எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். *ஷேர் பண்ணுங்க
Similar News
News April 6, 2025
ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

பாம்பன் ரயில் புதிய செங்குத்து பாலத்தை இன்று திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அனுராதாபுரம் விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாம்பம் வந்தார். பின்னர் பாம்பன் பாலத்தை திறந்து வைத்த மோடி தற்போது ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
News April 6, 2025
உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழாவில் 42 பவுன் திருட்டு

உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி சமேத மங்களநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கோயிலில் நான்கு ரத வீதிகள் மற்றும் தரிசனத்திற்காக நின்ற கோவை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 8 பெண்களிடம் கொள்ளையர்கள் 42 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.கழுத்தில் இருந்த செயின் திருடு போனதை அறிந்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் வரிசையாக புகார் அளித்தனர்.
News April 5, 2025
பாம்பன் திறப்பு – பிரதமர் ட்வீட்

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நாளை ஏப்.6ஆம் தேதி ராம நவமி நாளில் தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ.8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் அடிக்கல் நாட்டப்படும்” என பதிவிட்டுள்ளார்.