News April 22, 2025
இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை “1800 599 1500” இந்த கட்டணமில்லா இலவச நமபரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
Similar News
News December 30, 2025
ராமநாதபுரம்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

ராமநாதபுரம் மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் இணை ஆணையர் – 04567-221833 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
News December 30, 2025
ராமநாதபுரம் அருகே உடல் நசுங்கி பெண் பலி

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்டான் என்பவரின் மனைவி பொன்னுத்தாய். இவர் அருப்புக்கோட்டை காந்தி நகர், பிள்ளையார் கோயில் அருகில் இன்று அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
News December 30, 2025
ராமநாதபுரம்: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

ராமநாதபுர மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். <


