News June 18, 2024
இராமநாதபுரத்தில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு

இராமநாதபுரத்தில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், மற்றும் பொதுமக்கள் பலர் பி.எஸ்.என்.எல் சேவையை பயன்படுத்துகின்றனர். கடந்த சில நாட்களாக பி.எஸ்.என்.எல்
நெட்ஒர்க் சேவை இடையிடையே துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அலைபேசியில் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ளமுடியாமல் சிரமடைந்து வந்தனர். இந்நிலையில் பி.எஸ்.என்.எல் இணைய சேவை இன்றும் பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
Similar News
News August 29, 2025
ராம்நாடு: இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க..

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி 3, கடலாடி 6, கீழக்கரை 2, முதுகளத்தூர் 4, திருவாடானை 1, பரமக்குடி 3, ராமேஸ்வரம் 1, RS மங்களம் 9 என 29 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடைசி தேதி- செப். 7; எழுத்துதேர்வு- அக். 8; நேர்முகத்தேர்வு- அக். 23; 10th முடித்தவர்கள் <
News August 29, 2025
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்ட செங்குத்து ரயில் தூக்கு பாலத்தில் நேற்று (ஆக. 28) ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித் குமார் மஞ்சுவாணி தலைமையில் பாம்பன் பாலம் முதன்மை பொறியாளர்கள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் புதிய செங்குத்து பாலத்தில் டிராலியில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குறிப்பாக இப்பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வந்தது. இதையொட்டி இந்த ஆய்வு நடைபெற்றது.
News August 29, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

இன்று (28-08-2025) இரவு 11:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும் என காவல் துறை X தளத்தில் அறிவித்துள்ளது.