News March 21, 2025
இராமநாதபுரத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.ஆர் சேதுபதி நகரில் நேற்று(மார்ச்.20) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி செய்து வந்த பழனி என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை இராமநாதபுரம் அப்பாஸ் அலி அறக்கட்டளை சேர்மன் அமீர் அம்சா காவல் துறை உதவியோடு உடலை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 26, 2025
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – 16,412 பேர் எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு அரசு பொத்தேர்வுகள் நாளை மறுநாள் (மார்ச்.28) துவங்க உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 16,412 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 82 மையங்களில் அடிப்படை வசதிகளுடன் முன்னேற்பாடுகள் நடக்கின்றன. 860 பேர் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு காலை 10 முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கிறது. 24 மணி நேரம் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
News March 26, 2025
இராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.26) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 26, 2025
பாம்பன் பாலம் திறப்பு; பிரதமர் மோடி வருகை

ரூ.535 கோடியில் உருவான பாம்பன் ரயில் பாலம் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று, 2 மாதங்களுக்கு மேலாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. புதிய ரயில் பாலம் இம்மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என பெரும் எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தை ஏப்ரல்.6ல் பிரதமர் திறக்க உள்ளார் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் அறிவித்துள்ளார். *ஷேர்