News February 9, 2026
இராமநாதபுரத்தில் உள்ள உலகின் முதல் கோவில்

உத்திரகோசமங்கை சிவன் கோயில்தான் உலகில் தோன்றிய முதல் சிவன் கோயில். ராமாயண காலத்திற்கு முன்பே இந்த கோவில் உள்ளது என தகவல். இதனை ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது’ என்ற சொல் மொழியின் மூலமாக அறியலாம். உலகில் இங்குள்ள எந்த சிவன் கோயிலிலும் சிவனுக்கு தாழம்பூ வைத்து பூஜிக்கப்படுவதில்லை. இங்கு மட்டும் சிவனுக்கு தாழம்பூவைக் கொண்டு அர்ச்சனை நடக்கிறது. நடராஜர் திருமேனி மரகதத்தால் ஆனது இதன் தனி சிறப்பு.
Similar News
News February 10, 2026
ராமேஸ்வரம் கோவில் நடை அடைப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப் 6ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. திருவிழாவின் 3-ம் திருநாளான இன்று பிப்-10 ம் தேதி சுவாமி அம்பாள் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆதலால், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.09) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.