News October 26, 2024

இராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

தீபாவளியை முன்னிட்டு பண்டிகை நாட்களில் பிரபல கடைகள் உணவகங்கள் பரிசு கூப்பன் அளிப்பதாக கூறி WhatsApp லிங்க்குகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு அந்த போலியான லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. அப்படி ஏதாவது நடந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி தெரிவித்தார்.

Similar News

News August 28, 2025

ராணிப்பேட்டை: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

image

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ▶️ ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. ▶️ 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. ▶️ இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ▶️ இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க <<17539581>>(தொடர்ச்சி)<<>>

News August 28, 2025

உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா?

image

இத்திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)

News August 28, 2025

ராணிப்பேட்டைக்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள் மக்களே. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!