News September 23, 2025
இராணிப்பேட்டையில் காவல் துறை திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இன்று (23.09.2025) நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் வாரச்சந்தை, அரக்கோணம் ரயில்வே நிலையம், சுவால்பேட்டை சீனிவாசன் தெரு பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினார். பொதுமக்கள் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு குறித்து ரோந்து பணிகளை வலியுறுத்தினார். துணைக் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், ஆய்வாளர் நாகேந்திரன் உடன் சென்றனர்.
Similar News
News September 24, 2025
ராணிப்பேட்டை நெல் விற்பனைக்கு எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா (23.09.2025) வெளியிட்ட அறிவிப்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். விவசாயிகள் தங்களது நிலத்தில் உற்பத்தி செய்த நெலையே ஆவணங்களுடன் கொண்டு வர வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
News September 23, 2025
ராணிப்பேட்டை: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 23, 2025
ராணிப்பேட்டையில் நிறம் மாறும் அதிசய லிங்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் அமைந்துள்ளது ஜலநாதீஸ்வரர் திருக்கோயில். இங்கு உள்ள லிங்கம் உத்தராயண காலத்தில் (தை முதல் ஆனி வரை) சிவப்பு நிறத்திலும், தட்சிணாயன காலத்தில் (ஆடி முதல் மார்கழி வரை) வெண்மை நிறத்திலும் மாறுவதாக கூறப்படுகிறது. இந்த லிங்கத்தை பூசாரிகள் கூட தொடாமல் பூஜைகள் செய்கிறார்கள். இதனால் இது “தீண்டாத் திருமேனி” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிசய லிங்கத்தை பற்றி ஷேர் பண்ணுங்க!