News June 24, 2024

இராசிபுரம் அருகே சிறுத்தை நடமாட்டம்

image

நாமக்கல், இராசிபுரம் அடுத்துள்ள தேங்கல்பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் இரவில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக விவசாயிகள் கூறிய நிலையில் இதுகுறித்து விசாரணையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை நேற்று இரவு மற்றும் இன்றும் ஆராய கால் பதித்த தடங்கள் ஆய்வு செய்தும் சிசிடிவிகளையும் ஆராய்ந்து வருகின்றர்.

Similar News

News September 8, 2025

நாமக்கல்லில் இளம்பெண் தற்கொலை!

image

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே உள்ள எஸ்.நாட்டமங்கலம் ஊராட்சி குட்டமுக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவரத் மனைவி மோபிஷா(30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறால் கடந்த செப்.5ஆம் தேதி விஷம் அருந்திய மோனிஷா சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நேற்று(செப்.7) உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 8, 2025

நாமக்கல் மாவட்ட காவல் நிலையத்திற்கு விருது

image

நாமக்கல் மாவட்டம், நேற்று(07/09/25) ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான விருதினை காவல்துறை இயக்குநர் (பொ) வெங்கட்ராமனிடம் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் விருது மற்றும் பரிசுகளை பெருமையுடன் பெற்றுக்கொண்டார். இதில் நாமக்கல் காவல்துறை பெருமையடைந்துள்ளனர்.

News September 8, 2025

நாமக்கல்: இபிஸ் சுற்றுப்பயணம் தேதி மாற்றம்

image

நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 18, 19, 20 ஆகிய தேதிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது சில தவிர்க்க முடியாத காரணத்தால் 19, 20, 21 ஆகிய மூன்று தேதிகளில் சேந்தமங்கலம், ராசிபுரம், நாமக்கல் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய நகரத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளார்.

error: Content is protected !!