News September 5, 2025

இராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

image

இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவன் பி.கோபிபிரசாந்த், புது டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம், அந்தமானில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். மேலும், அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் எஸ்.ஹரி, தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் 2 மற்றும் 3ஆம் இடங்களை பிடித்து கோப்பைகளை வென்றுள்ளார்.

Similar News

News September 5, 2025

நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 5, 2025

நாமக்கல்: பயிற்சியுடன் மாதம் ரூ.12,000!

image

நாமக்கல் மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு அந்தந்த மாநில அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 22.09.2025 ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 5, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து வரும் வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் .

error: Content is protected !!