News September 13, 2024
இரவோடு இரவாக கட்டடம் இடித்து அகற்றம்
கரூர் கணபதிபாளையத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் புதிதாக 5 அடி அகலம், 5 அடி நீளம், சுமார் 12 அடி உயரத்திற்கு கோவில் போன்ற அமைப்புடன் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், சாமானிய மக்கள் நலக்கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிற்கிணங்க இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது.
Similar News
News November 20, 2024
தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவன்
கரூர் மாநகராட்சியில் உள்ள சிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஹரிஹரன், மல்யுத்த போட்டியில் 100 கிலோ பிரிவில் தமிழ்நாடு அளவில் முதல் இடத்தைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி தலைமையாசிரியரிடம் சான்றிதழ் காண்பித்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெற்றார். உடன் விளையாட்டு ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
News November 20, 2024
மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
குளித்தலை அருகே நங்கவரத்தை அடுத்துள்ள தமிழ்சோலையை சேர்ந்தவர் மதன்குமார். இவரது மகன் ரோகித் ஷர்மா(6). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஆழ்துளை குடிநீர் குழாயை பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தார் அப்போது. மின்சாரம் தாக்கி சிறுவன் கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 19, 2024
கரூர் தலைப்பு செய்திகள்
1.கரூர் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.கரூரில் நூல் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து
3.க.பரமத்தி அரசுப்பள்ளி கட்டுமான பணிகள் – கலெக்டர் ஆய்வு
4.ரேஷன் கடை நேர்முகத்தேர்வு அனுமதி சீட்டு வெளியீடு
5.புலியூர் அருகே டூவிலர் மோதி ஒருவர் படுகாயம்