News January 13, 2026
இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
Similar News
News February 5, 2026
பெற்றோர்களே இதை கவனியுங்க!

குழந்தைகளிடையே அதிகரித்துவரும் சமூக ஊடக பயன்பாடு, அவர்களை வெகுவாக பாதிக்கும் என்று ஸ்வீடனின் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால் நீண்ட நேரம் ஒரு விஷயத்தில் குழந்தைகளால் கவனம் செலுத்த முடியாமல் போகும் என்றும், ADHD போன்ற அறிகுறிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.
News February 5, 2026
தமிழக தேர்தல் தேதி.. ECI முக்கிய ஆலோசனை

தமிழகம், அசாம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லி தேர்தல் ஆணையத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்ற உள்ள 1,444 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இன்றும் நாளையும் நடைபெறும் கூட்டத்தை அடுத்து தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 5, 2026
போராட்டத்தை அறிவித்தார் EPS

டாஸ்மாக் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் பிப்.11-ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்படும் என EPS அறிவித்துள்ளார். பணி நிரந்தரம், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை டாஸ்மாக் ஊழியர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் தங்கமணி தலைமையில் சிந்தாதிரிப்பேட்டை முதல் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


