News August 7, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.7) மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 25, 2025

மதுரை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE பண்ணுங்க.

News December 25, 2025

மதுரை அருகே மனைவி பிரிவால் வாலிபர் தற்கொலை

image

சத்திரப்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் முத்திராஜா (25). இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவருடன் தகராறில் ஈடுபட்ட மீனாட்சி தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார். இதனால் வேதனையடைந்த முத்துராஜா தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

மதுரை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

மதுரை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!