News August 11, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தி.மலை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Similar News

News March 6, 2026

தி.மலையில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

image

தி.மலை பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். SHARE NOW!

News March 6, 2026

தி.மலை: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

image

தி.மலை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

News March 6, 2026

தி.மலை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

தி.மலை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!