News January 14, 2026
இரவு 10 மணிக்கு மேல் போனில் இதை பார்த்தால்..

ரயிலில் இரவு நேரத்தில் பலர் போனில் சத்தமாக ரீல்ஸ் அல்லது யூடியூப் வீடியோ பார்த்தபடி பயணிப்பார்கள். அவர்களுக்கு அது பொழுதுபோக்கு என்றாலும், மற்றவர்களுக்கு எரிச்சல்தானே! ரயில்வே சட்டப்பிரிவு 145-ன் படி, இரவு 10 மணிக்கு மேல் யாரும் போனில் சத்தமாக வீடியோ பார்க்கவோ, சத்தமாக பேசவோ கூடாது என்ற சட்டமே உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ₹500- ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும். இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News February 1, 2026
அரசு ஊழியர்களை ஏமாற்றிய திமுக அரசு: அன்புமணி

TAPS திட்டத்தை செயல்படுத்த ₹13,000 கோடி நிதி திமுக அரசிடம் இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார். தனது X பதிவில், ஜனவரியில் ஓய்வுபெற்ற 5,000 அரசு ஊழியர்களில், ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்களுக்கு அதற்கான ஆணை வழங்கப்படவில்லை என சாடியுள்ளார். இதுபற்றிய அரசாணையில், விதிமுறைகளை வகுத்த பிறகே தமிழகத்தில் TAPS திட்டம் நடைமுறைக்கு வரும் என்பதை திமுக அரசு திட்டமிட்டு மறைத்து ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
News February 1, 2026
Sports 360°: கூடைப்பந்தில் தமிழகம் சாம்பியன்

*ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20-ல் பாகிஸ்தான் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி *ஆஸி., ஓபன் டென்னிஸ் ஃபைனலில், அல்காரஸ் – ஜோகோவிச் இன்று மோதல் *தாய்லாந்து மாஸ்டர்ஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு தேவிகா முன்னேற்றம் *தேசிய கூடைப்பந்து 3*3 சாம்பியன்ஷிப்பில் தமிழகம் 21-20 என்ற புள்ளிகள் கணக்கில் UP-ஐ வீழ்த்தியது *SAFF U-19 மகளிர் கால்பந்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளை வீழ்த்தியது
News February 1, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


