News October 12, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (12.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் :9884098100 எண்ணிற்கும் அழைக்கலாம்.
Similar News
News August 29, 2025
கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

இன்று பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிந்தாங்கல் பகுதியில் பெரிய அளவிலான கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி சுற்றி திரிந்த வாலிபரை பாணாவரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் சோளிங்கரை பகுதியைச் சேர்ந்த சுதன் 24 என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.
News August 29, 2025
ராணிப்பேட்டை : B.Sc,B.E.,B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு

ராணிப்பேட்டை மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <
News August 29, 2025
ராணிப்பேட்டை: அமெரிக்காவால் தோல் தொழிலுக்கு சிக்கல்

ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் இருந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரியால், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய பொருட்களின் வரவேற்பு குறைய வாய்ப்புள்ள நிலையில், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் தோல் பதனிடும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.