News August 12, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (12.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 13, 2025

தி.மலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரத்தில் கரியமங்கலம் விபிஆர்சி கட்டடம், கலசப்பாக்கம் வட்டாரத்தில் ஆனைவாடி சமுதாய கூடம், சேத்துப்பட்டு வட்டாரத்தில் கேபிகே மஹால், ஆரணி வட்டாரத்தில் எம்ஆர்ஆர் மண்டபம், வெம்பாக்கம் வட்டாரத்தில் நாட்டேரி விபிஆர்சி கட்டடம் மற்றும் புதுப்பாளையம் கஜலஷ்மி மண்டபம் ஆகிய இடங்களில் இன்று(ஆக.13) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.

News August 12, 2025

சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் ஈசானஓடை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரவிச்சந்திரன், தினகரன் சீனிவாசன், சேட்டு, வெற்றிவேல் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

News August 12, 2025

திருவண்ணாமலை தடகள மாணவிகளே தயாராகுங்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (13-08-2025) தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் திருவண்ணாமலை குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பங்கு பெறலாம் முதல் 3- இடம் பிடிக்கும் மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!