News January 2, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (3.1.2025 ) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. 

Similar News

News October 30, 2025

கள்ளக்குறிச்சி: முந்திரி காட்டில் தூக்கில் தொங்கிய பெண்

image

ஒடபப்பன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வித்யா, சென்னை ஸ்ரீபெரும்புதுார் மொபைல் போன் தொழிற்சாலை ஊழியர். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் வித்யாவிற்கு திருமணம் செய்ய விருப்பமில்லை, இதனால் நேற்று முன்தினம் மாலை முந்திரி காட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் நேற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News October 30, 2025

கள்ளக்குறிச்சியில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சியில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை (அக்.30) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News October 29, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். 5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!