News April 20, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(20.4.2025 ) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
கோமுகி அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக இன்று (நவ.7) முதல் 29 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக நீர்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோமுகி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலமாக சுமார் 10 ஆயிரத்து 860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 7, 2025
கள்ளக்குறிச்சி: வயிற்று வலியால் தற்கொலை!

கள்ளக்குறிச்சி: பொற்படாக்குறிச்சியை சேர்ந்த முனியம்மாள் வயது முதிர்வின் காரணமாக தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (நவ.6) மாலை வயிற்று வலி தாங்க முடியாமல் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 7, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.6) இரவு முதல் இன்று (நவ.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


