News February 2, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 2 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
Similar News
News March 2, 2026
அரக்கோணத்தில் ஒருவர் மீது குண்டாஸ்!

ராணிப்பேட்டை: அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து, சட்டவிரோதமாக மதுபான விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட முத்து(36) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜம்மாலின் பரிந்துரையின் படி, முத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டார்.
News March 2, 2026
ராணிப்பேட்டை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். ராணிப்பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தூக்கு மாட்டி இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
News March 1, 2026
ராணிப்பேட்டை: அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க


