News August 20, 2025

இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 19 இரவு ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்கள் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மணல்மேடு சீர்காழி பொறையார் திருக்கடையூர் குத்தாலம் செம்பனார்கோயில் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் உள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

Similar News

News August 20, 2025

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120அடியை எட்டி உள்ள நிலையில் கொள்ளிடம் ஆற்றில் 50,000 கன அடிக்கு மேல் தண்ணீர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கொள்ளிடம் கரையோரம் உள்ள திட்டு பகுதி கிராமங்களான திட்டுப்படுகை, நாதல்படுகை, முதலைமேடு, திட்டு அளக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது கால்நடைகளை முன்னெச்சரிக்கையாக மேடான பகுதிக்கு கொண்டு செல்லும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News August 20, 2025

மயிலாடுதுறையில் மறக்கப்பட்ட இடம்!

image

நம் மயிலாடுதுறை பல வரலாறுகளை உள்ளடக்கியுள்ளது. அதில் முக்கியமாக சீர்காழி அருகே உள்ள தீவுக்கோட்டை சிறப்புமிக்கதாகும். இங்கு தான் சோழர்கள் தங்களது இறுதி காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு பழங்கால செங்கற்கள், ஓடுகள், சிதிலமடைந்த கட்டிடங்களும் காணப்படுகிறது. மேலும் பயன்பாடற்று கிடைக்கும் இவ்விடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

மயிலாடுதுறை: தமிழ் தெரிந்தவர்களுக்கு வங்கி வேலை

image

மயிலாடுதுறை மக்களே.. வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த தமிழ் நன்கு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து 08.09.2025க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.!

error: Content is protected !!