News March 19, 2025
இரவு ரோந்து பணி – போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்றுஇரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை வெளியிட்டுள்ளது. தக்கோலம், பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் உள்ளனர். புகார்கள் மற்றும் தகவல்களுக்கு புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 98840 98100-ஐ அழைக்கலாம்.
Similar News
News April 20, 2025
ராணிப்பேட்டை மாவட்ட முக்கிய எண்கள்

▶️மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் – 04172-272211
▶️தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணித்துறை – 101
▶️காவல் கட்டுப்பாட்டு அறை – 100
▶️மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை – 1077
▶️காவல் துறை புகார் வாட்ஸ் அப் எண் – 9092700100
▶️பாலியல் வன்கொடுமை தடுப்பு – 1091
▶️குழந்தைகள் உதவி – 1098
▶️தாசில்தார், போளூர் – 9445000517
▶️பி.எஸ்.என்.எல் உதவி – 1500
ஷேர் பண்ணுங்க மக்களே
News April 20, 2025
நெமிலி அருகே நாய் கடித்ததில் 7 பேர் காயம்

நெமிலியை அடுத்த திருமால்பூரில் வெள்ளிக்கிழமை இரவு ஜஸ்வின் (14), கனிஷ் (14), தருண் (15) உள்ளிட்ட பல சிறுவர்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த போது தெரு நாய் கடித்துள்ளது. அதுபோல் வெவ்வேறு இடங்களில் 4 பேரை தெரு நாய் கடித்துள்ளது. இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நெமிலி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
News April 20, 2025
குழந்தை பாக்கியம் அருளும் ரத்தனகிரி பாலமுருகன் கோவில்

ராணிப்பேட்டை ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஒரு பழக்கம் உள்ளது. குழந்தை பாக்கியம் தரும் மிக புண்ணியமான தலமாக ரத்தினகிரி பாலமுருகன் கோவில் கருதப்படுவதால் முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளையும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர். இதனால் அன்னியோனியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.