News August 26, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News August 26, 2025
காலைஉணவு திட்ட முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஆக.25) முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (26) காலை உணவுத்திட்டத்தை நகர்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளிகளில் விரிவுப்படுத்தி துவக்கி வைக்க உள்ளதையொட்டி, அதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் மேற்க்கொள்ள உள்ள முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு கூட்டம் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைப்பெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
News August 25, 2025
திருப்பத்தூர்: தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்வது?

திருப்பத்தூர் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். <<17514164>>தொடர்ச்சி<<>>