News December 5, 2024

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரின் விவரங்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (05.12.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

Similar News

News February 25, 2026

ராணிப்பேட்டையில் பண்ணை வைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு <<>>கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 25, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

image

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(பிப்.26) காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப்பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாக தெரிவிக்கலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News February 25, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தல்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான தேர்தல் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், தலைமை தாங்கி பேசிய கலெக்டர் சந்திரகலா, ‘தேர்தல் பணிகளை முறையாக தெரிந்து கொண்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் விதிமுறைகளை பின்பற்றி, அமைதியாகவும், நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும்’ என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

error: Content is protected !!