News September 8, 2025

இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (08.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியாகி உள்ளது. பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி பகுதியில் மாவட்ட பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் உதவி தேவைப்பட்டால் தனிப்பட்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News September 9, 2025

கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

image

கிருஷ்ணகிரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற
▶️குடும்ப அட்டை
▶️வருமானச் சான்று
▶️குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
உள்ளிட்ட சான்றுகளுடம் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘உங்களுடன் ஸ்டாலின்’ <>முகாமில் <<>>விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News September 9, 2025

கிருஷ்ணகிரி: பெயர்க் காரணம் தெரியுமா?

image

கிருஷ்ணகிரி ஒரு மலைப்பிரதேசம். இங்குள்ள மலைகள், கருப்பு நிறத்தில் உள்ளதால், கிருஷ்ணா – கருப்பு, கிரி – மலை என்ற இரு சொற்கள் இணைந்து இப்பெயர் பெற்றிருக்கலாம். திப்பு சுல்தான், ஹைதர் அலியின் காலத்தில், மலை மீதொரு வலிமையான கோட்டை கட்டப்பட்டது. மைசூர் அரசின் பாதுகாப்பிற்கு முக்கியமான இடமாக இக்கோட்டை விளங்கியது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி என்ற பெயர் வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவம் பெற்றது.

News September 8, 2025

கிருஷ்ணகிரியில் புதிய நிர்வாகிகள் நியமனம்

image

இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின் பேரில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் வளர்ச்சி மற்றும் பொதுமக்கள் சேவைக்காக பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட தலைவர் V.S. கவியரசு வாழ்த்துத் தெரிவித்தார்.

error: Content is protected !!