News April 6, 2025
இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 7, 2025
தேனியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கொடுவிலாா்பட்டியில் உள்ள கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்ககம் ஆகியவற்றின் சாா்பில் நவ.8 அன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 6, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 06.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஆண்டிபட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News November 6, 2025
தேனி: நவ.8ம் தேதி நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம், உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் 08.11.2025 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என்றார்.


