News July 11, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (ஜூலை 10) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.
Similar News
News August 25, 2025
BREAKING: மயிலாப்பூர் ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது

தேசிய ஆசிரியர் விருது, ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பையும், பள்ளிக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் மத்திய அரசின் விருதாகும். ஒவ்வொரு ஆண்டும் செப்.5 ஆசிரியர் தினத்தன்று குடியரசுத் தலைவரால் இது வழங்கப்படுகிறது. மயிலாப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி மற்றும் திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தமிழகத்திலிருந்து இந்தாண்டு தேர்வாகியுள்ளனர்.
News August 25, 2025
நல்லக்கண்ணு உடல்நிலை குறித்து திருமாவளவன் நேரில் விசாரிப்பு

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று (ஆக.25 ) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவரது உடல்நலன் குறித்தும், சிகிச்சை குறித்தும் விசாரித்தார். மேலும், அவரின் குடும்பத்தினரிடமும் நலம் விசாரித்தார்.
News August 25, 2025
சென்னை: இனி What’s App-லயே எல்லாம்! SUPER NEWS

சென்னை வாசிகளே அரசு சேவைகளை பெற சென்னை மாநகராட்சி சூப்பர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சொத்து வரி, தொழில் வரி, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று, குடிநீர் இணைப்பு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு போன்ற 35 சேவைகளை What’s Appலயே பெறலாம். இதற்கு ‘9445061913’ என்ற எண்ணுக்கு ‘Hi” னு SMS பண்ணுங்க. பின் மாநகராட்சியின் சேவைகளை அதில் பெற்றுக்கொள்ளலாம். (SHARE)