News February 26, 2025
இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் கள்ளக்குறிச்சி

சோழ தேச பெருமையை நிலைநாட்டிய ராஜ ராஜா சோழனை பெற்ற பெருமை கொண்டது கள்ளக்குறிச்சி மாவட்டம். திருக்கோவிலூர் தான் சோழனின் தாயார் வானவன் மாதேவி பிறந்த ஊர். வானவன் மாதேவிக்கும் சுந்தர சோழனுக்கும் திருமணம் நடந்தது பற்றியும்,ராஜ ராஜ சோழன் இங்கு பிறந்தது பற்றியும் திருக்கோவிலூர் வீரட்டானேசுஸ்வரர் கோவில் கல்வெட்டு கூறுகிறது. சோழத்திற்கு பெருமை சேர்க்கும் நம்ம ஊரு பெருமையை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News March 6, 2026
கள்ளக்குறிச்சி: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

கள்ளக்குறிச்சி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். *கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*
News March 6, 2026
கள்ளக்குறிச்சி : இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!


