News September 27, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (செ.27) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News January 9, 2026
மாவட்ட ஆட்சியருக்கு நாள்காட்டி வழங்கிய செயல் அலுவலர்

மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில்
1300க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்கள் வீடுகளுக்கும் தினசரி நாள்காட்டி வழங்கப்பட்டது. இன்று (ஜன.8) ஆட்சியரை நேரில் சந்தித்து ஊராட்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வைத்து ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குகாலண்டர் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ரா. பரமசிவம் ஊராட்சி மன்ற செயல் அலுவலர் ஆவார்.
News January 9, 2026
பொங்கல் கலை விழா குறித்து ஆலோசனை கூட்டம்!

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைப் பண்பாட்டு துறையின் சார்பில் பொங்கல் கலை விழா நடத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று (ஜன.08) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா மற்றும் கலை பண்பாட்டு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News January 9, 2026
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ₹ 138.50 கோடி ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் நான்கு லட்சத்து 45 ஆயிரத்து 333 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ₹ 138.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஜன.8) தெரிவித்துள்ளார்.


