News September 2, 2024

இரவு நேர காவல்துறையினரின் தொலைபேசி எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 14, 2025

தூத்துக்குடி: 558 வழக்குகளுக்கு தீர்வு

image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நேற்று (செப்.13) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண்.1) ஆனந்த், (எண்.2) மணிமேகலா ஆகியோர் முன்னிலையில்விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்கு என 558 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காணபட்டது.

News September 14, 2025

தூத்துக்குடி: உங்க பெயர்ல இத்தனை SIM -ஆ??

image

தூத்துக்குடி மக்களே உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை SIMகள் இருக்குன்னு சந்தேகம் உள்ளதா?? அதை எப்படி பார்க்கிறன்னு தெரியலையா? மத்திய அரசின் சஞ்சார்சாதி மூலம் உங்க ஆதார் எண் மூலமா எத்தனை SIMகள் உள்ளதுன்னு. இங்கு <>கிளிக் <<>>செய்து தெரிஞ்சுக்கோங்க… உங்க ஆதார் எண்ணுடன் உங்க அனுமதியின்றி வேறு எண்கள் வாங்கபட்டு இருந்தா இதிலே DEACTIVATE பண்ணுங்க. ஒரு ஆதார் எண்ணுக்கு 9 SIMகள் வரை வாங்க முடியும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News September 14, 2025

தூத்துக்குடியில் சரித்திர பதிவேடு குற்றவாளி தற்கொலை

image

தூத்துக்குடி தாளமுத்து நகர் அன்னை தெரேசா மீனவர் காலனியை சேர்ந்தவர் எட்வர்ட் மகன் வினிஸ்டன் (30). இவர் தாளமுத்து நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். தருவைகுளம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்க்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!