News August 15, 2024
இரவு நேர காவல்துறையினரின் தொலைபேசி எண்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 15.08.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
தூத்துக்குடி மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்ற பெயரில் தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள நேரிடும். இது போன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.
News September 14, 2025
தூத்துக்குடி: இந்த வாய்ப்பை MISS பண்ணாதீங்க!

தூத்துக்குடி மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News September 14, 2025
தூத்துக்குடி: காவலரின் கணவரிடம் அரிவாளில் வெட்டி வழிப்பறி

தூத்துக்குடி, எட்டயபுரத்தை சேர்ந்த ஜேசுராஜ் (47) என்பவர் மனைவி தமிழ்ச்செல்வி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இவரது கணவன் ஜேசுராஜ் நேற்று முன்தினம் இரவு எட்டயபுரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டி 2300 பணத்தை ஜிபே மூலம் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.