News March 27, 2025
இரவு நேரத்தில் ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (மார்ச்.27) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது எனவே மக்கள் பயன்படுத்திக்கொண்டு காவல் ஆய்வாளர்களுக்கு தங்களது இரவு நேர பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
Similar News
News November 9, 2025
செங்கல்பட்டு: தெருநாய்க்கு விஷம் வைத்து கொலை

புதுபெருங்களத்துார், சீனிவாசா நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் தீபா, 30. வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். அதோடு, 2 தெரு நாய்களையும் வளர்த்து வந்தார். அதே தெருவை சேர்ந்தவர் ஜெகன்குமார் தீபா வளர்க்கும் தெரு நாய்கள், குழந்தைகளை கடிக்க பாய்ந்து வந்ததாகவும், தெருவில் செல்வோரை விரட்டியதாகவும் விஷம் வைத்து கொன்றுள்ளார். இந்த வழக்கில், இருவர் நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
News November 9, 2025
தேசிய பாதுகாப்பு படை அதிகாரியின் கார் எரிந்து நாசம்

தாம்பரம் அருகே நெடுங்குன்றத்தில், என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு குரூப் கமாண்டராக பணிபுரிந்து வருபவர், அங்குஷ் ஷர்மா. இவருக்கு சொந்தமான கார், இந்த மையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை, 3:30 மணிக்கு, இந்த கார் தீ பிடித்து எரிந்தது. பணியில் இருந்த ஊழியர்கள் தீ அணைத்தனர். இது குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 8, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு பணி காவல் அலுவலர்களின் விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக இரவு பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசரத் தேவை உள்ள நேரங்களில் மேற்கண்ட பட்டியலில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


