News February 24, 2026

இரவு தாமதமாக தூங்கினால்..

image

ஆரோக்கியமாக இருக்க உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் தூக்கமும் அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவு 10.30 மணிக்கு பிறகு செரிமானம் மெதுவாகிறது. இந்த நேரத்தில் தூங்காமல் இருப்பது உடலை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இதனால், பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்றன. இது உடல் எடையை பாதிப்பதோடு, அஜீரணம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கின்றனர்.

Similar News

News February 25, 2026

பாமகவுக்கு 18+1…தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதா?

image

அன்புமணி தரப்பு பாமகவுடனான தொகுதி பங்கீட்டை அதிமுக இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு இம்முறை 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாமக இரண்டு பிரிவுகளாக உள்ளதால் கடந்த முறையைவிட 5 தொகுதிகளை அதிமுக குறைத்துள்ளதாக தெரிகிறது.

News February 25, 2026

சிறையில் 7 ஆண்டுகளை கழித்த நல்லகண்ணு

image

எளிமையின் சிகரமான அய்யா நல்லகண்ணுவின் சிறை வாழ்க்கை தியாகங்களால் நிறைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது அவர் சிறையில் பெரும் சித்ரவதைகளை அனுபவித்தார். பின்னர் நெல்லைச் சதி வழக்கில் 1949-1956 வரை மதுரை, நாங்குனேரி போன்ற இடங்களின் சிறை தண்டனை அனுபவித்தார். இதை தவிர விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் நலனுக்காகப் போராடியபோது பலமுறை சிறை சென்றுள்ளார்.

News February 25, 2026

₹8,000 அல்ல இனி ₹12,000.. அதிமுக வாக்குறுதி

image

கடலில் காணாமல் போகும் மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணங்கள் கிடைக்கும் வரை மாதம் ₹2,000 மற்றும் மீனவர்கள் குடும்பத்திற்கான கல்வி, திருமண உதவித் தொகைகள் உயர்த்தி வழங்கப்படும் என <<19233503>>ஸ்டாலின் <<>>அறிவித்தார். இந்நிலையில், மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ₹8000-லிருந்து ₹12,000 உயர்த்தப்படும் என்று <<19229863>>EPS <<>>அறிவித்திருந்ததை, அதிமுக தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!