News January 7, 2025
இரவில் வலம் வரும் குமரி எஸ்பி! அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்ட புதிய எஸ்பியாக ஸ்டாலின் நியமிக்கப்பட்டு பதவி பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவி பொறுப்பேற்ற பின்னர், இரவு நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சாதாரண உடையில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ரவுடிகள் நடமாட்டம், தேவை இல்லாமல் இரவு நேரங்களில் பொது இடங்களில் உலாவுவோர் போன்றவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 26, 2026
குமரி: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

குமரி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News January 26, 2026
குமரி: பேரூராட்சி துணைத் தலைவர் உட்பட 4 பேர் கைது

குளச்சல் பகுதியில் கவரிங் நகை கடையில் பெண் ஊழியர் தனியாக இருக்கும்போது அவரின் கவனத்தை திசை திருப்பி தங்க முலாம் பூசிய நகைகளை 4 பெண்கள் உட்பட 5 பேர் திருடி சென்றனர். இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், புத்தளம் பேரூராட்சி துணைத் தலைவர் பால் தங்கம், சபரிஷா, தங்க புஷ்பம் மற்றும் கார் டிரைவர் அனீஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
News January 26, 2026
குமரி: முதலையை பிடிக்கும் பணிகள் தீவிரம்

கோதையாற்றில் கடையால மூட்டு – திற்பரப்புக்கு இடையே முதலை நடமாட்டம் இருப்பதைத் தொடர்ந்து ஆற்றுப்பகுதியில் மிதவை கூண்டு அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடையால மூடு அருகே ஒரு நடைக்கல் பகுதிக்கும் திற்பரப்பு தடுப்பணை படகு சவாரி நடைபெறும் எல்லை பகுதிக்கும் இடையே வலை கட்டி முதலையின் நடமாட்டத்தை குறிப்பிட்ட இடத்திற்குள் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


